உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  போக்குவரத்து நெரிசலை குறைக்க நான்கு இடங்களில் விழா

 போக்குவரத்து நெரிசலை குறைக்க நான்கு இடங்களில் விழா

கள்ளக்குறிச்சி: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவால் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க, விழா 4 இடங்களில் பிரித்து நடந்தது. தியாகதுருகத்திற்கு முன்னதாக திம்மலை பஸ் நிறுத்தம் அருகே முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியில் உளுந்துார்பேட்டை தொகுதி, தியாகதுருகம் ஒன்றியம், நகர பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா அருகே கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கள்ளக்குறிச்சி நகரம், சங்கராபுரம் தொகுதி, சின்னசேலம் ஒன்றியம் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரங்கில் பயனாளிகள் மற்றும் அதிகாரிகள், தொழிலதிபர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மணலுார்பேட்டையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரிஷிவந்தியம், திருக்கோவிலுார் ஒன்றியங்கள், மணலுார்பேட்டை நகரத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியை நான்காக பிரித்து அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் நெரிசில் சிக்கி கொள்ளாமல் எளிதாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து மாற்றம் கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் பஸ் நிறுத்தம் சேலம் - சென்னை நான்கு வழிச்சாலையை ஒட்டிய தனியார் இடத்தில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல், ஏமப்பேர் ரவுண்டானா அருகே கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழாவும், திம்மலை அருகே வரவேற்பும் அளிக்கப்பட்டது. மூன்று நிகழ்ச்சிகளும் நான்கு வழிச்சாலையை ஒட்டியவாறே நடந்தன. நிகழ்ச்சியின் போது, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் புறவழிச்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நகரின் வழியே திருப்பி விடப்பட்டது. நீலமங்கலம், விருகாவூர் வழியே மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி