உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெயிண்ட் கடையில் தீ விபத்து

பெயிண்ட் கடையில் தீ விபத்து

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.கள்ளக்குறிச்சி அடுத்த காரனுாரை சேர்ந்தவர் மணிவேல் மனைவி கலையரசி,30; இவர், கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9.50 மணியளவில் கடையின் உட்பகுதி தீ பிடித்து எரியத்தொடங்கி, அதிகளவு புகை வெளியே வந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி சிறப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இதில், கடையில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பெயிண்ட் மற்றும் மரத்திலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. மின்கசிவினால் கடை தீ பிடித்து எரிந்ததாக தீயணைப்புதுறை வீரர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ