உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தீப்பந்தம் ஏந்தி ஆர்பாட்டம்

தீப்பந்தம் ஏந்தி ஆர்பாட்டம்

சங்கராபுரம்: மா.கம்யூ., கட்சி சார்பில் தீப்பந்தம்  எந்தி போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக தெரு மின் விளக்குகள் இல்லாமல் உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து நேற்று முன் தினம் இரவு  தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவாஜி, ஒன்றிய குழு உறுப்பிணர்கள் பாஸ்கர்,சரத்குமார்,சக்திவேல் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை