வெள்ளத்தால் சேதமான கரும காரிய கொட்டகை
மூ ங்கில்துறைப்பட்டு அண்ணா நகர், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் நலன் கருதி கடந்த ஆண்டு கரும காரிய கொட்டகை ரூ. 4.50 லட்சம் மதிப்பில் கட்டி முடித்துபொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு டிச., 2ம் தேதி தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட அதிகப்படியான வெள்ளப்பெருக்கு காரணமாக, கரும காரிய கொட்டகை சேதம் அடைந்தது. சேதம் அடைந்து ஒரு வருடம் கடந்தும், கரும காரிய கொட்டகையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஈம சடங்குகளை செய்ய இடம் இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சேதம் அடைந்த கரும காரிய கொட்டகையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சேதம் அடைந்த கரும காரிய கொட்டகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.