உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் திடீர் சோதனை

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் திடீர் சோதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் சோதனை செய்து, காலாவதியான 70 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதி கடைகளில் காலாவதியான மற்றும் நிறம் அதிகம் சேர்க்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் சென்றது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாஸ்கரன், சண்முகம், தாரணி, மான்சி ஆகியோர் கொண்ட குழுவினர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், கோட்டைமேடு, ரோடுமாமந்துார் ஆகிய பகுதிகளில் உள்ள இனிப்பு, பேக்கரி கடைகள் என மொத்தம் 21 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுமார் 70 கிலோ காலாவதியான, லேபிள் இல்லாத இனிப்பு மற்றும் கார வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் 14 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது, அவ்வாறு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ