உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரூ.22.20 கோடியில் புதிய பஸ் நிலையம் திருக்கோவிலுாரில் அடிக்கல் நாட்டு விழா

ரூ.22.20 கோடியில் புதிய பஸ் நிலையம் திருக்கோவிலுாரில் அடிக்கல் நாட்டு விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் 22.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நகராட்சி கமிஷனர் திவ்யா வரவேற்றார். நகர மன்ற தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், நகர மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் பொன்முடி எம்.எல்.ஏ., புதிய பஸ் நிலையத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டில் பேசியதாவது: ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் போது தான் திருக்கோவிலுார் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடமும் கட்டப்பட்டது. மேலும் அறிவு சார் மையம், அரசு கலைக்கல்லுாரி, புதிய காய்கறி மார்க்கெட், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என பல வளர்ச்சி பணி திட்டங்கள் திருக்கோவிலுாரில்நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் 120 கோடி ரூபாய் மதிப்பில் தென்பெண்ணை ஆற்றில் புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்கோவிலுார் நகரம் மற்றும் தொகுதியில் தொடர்ந்து வளர்ச்சிப் பணி திட்டங்கள் முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் இன்று புதிய பஸ் நிலையம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இவ்வாறு பொன்முடி பேசினார். நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ