உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராம மக்களை குறிவைத்து ஏமாற்றி மோசடி

கிராம மக்களை குறிவைத்து ஏமாற்றி மோசடி

கி ராம மக்களை குறி வைத்து ஏமாற்றும் மோசடி பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் அதிகளவில் கிராம பகுதிகளைக் கொண்டுள்ளது. கிராம மக்கள் பெரும்பாலானோர் பல்வேறு வகைகளில் உதவித் தொகை மற்றும் திட்ட பயன்பாட்டிற்கு மனுக்கள் அளித்து வருகின்றனர். இதற்கிடையே மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் மாத உதவித் தொகை, கட்டடம் கட்டுவதற்கான பணம் மற்றும் லோன் பணம் பெற்று தருவதாக கிராம மக்களின் அறியாமையை கொண்டு நம்ப வைத்து பல்வேறு வகைகளில் ஏமாற்றுகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் போலி விண்ணப்பங்கள் அளித்து பூர்த்தி செய்து தருமாறு கூறி, விண்ணப்பங்களுக்கு கிராம மக்களிடம் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை என வசூல் செய்கின்றனர். சிலர் அறக்கட்டளை என்ற பெயரில் நிதி உதவி பெற்று தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். இதுபோன்ற மோசடி பேர்வழிகள் ஒவ்வொரு கிராமமாக சென்று வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் கிராமத்தில் விபரம் அறிந்த சிலர், மோசடி பேர்வழிகளிடம் கேள்வி கணையை எழுப்பும்போது, உஷராகி அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகின்றனர். சிலர் சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு, மோசடி நபர்களை எச்சரித்து அனுப்பி வைக்கும் சம்பவமும் நிகழ்கிறது. சிறிய தொகை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கிராம மக்கள் யாரும் முன்வராததை மோசடி பேர்வழிகள் சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இதனையடுத்து சில நாட்கள் கழித்து வேறு கிராமங்களில் தங்களது கைவரிசையை காட்ட துவங்கி விடுகின்றனர். இதுபோன்ற சம்பவம் கிராம பகுதிகளில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், மோசடி பேர்வழிகளை பிடித்து காவல் துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்