மேலும் செய்திகள்
பொறியியல் பட்டதாரியிடம் ரூ.7 லட்சம் 'அபேஸ்'
04-Sep-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே டெலிகிராம் செயலி மூலம் 94 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மகன் முத்துலிங்கம், 38; எம்.காம்., பட்டதாரி. இவருக்கு, டெலிகிராம் செயலியில் வீட்டிலிருந்தே பணி புரியலாம் என தகவல் வந்துள்ளது.உடன், டெலிகிராம் ஐ.டி.,யில் இருந்த நபரை தொடர்பு கொண்டு முத்துலிங்கம் பேசினார். அதற்கு, 'ேஷர்சாட்' செயலியில் வரும் விளம்பரத்தை 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து வெப்சைட்டில் அனுப்பினால் பணம் கிடைக்கும் என மர்ம நபர் தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து, ஸ்கிரீன் ஷாட் அனுப்பியதில் முத்துலிங்கம் வங்கி கணக்கிற்கு 200 ரூபாய் வந்துள்ளது. மேலும், அடுத்த கட்டமாக பணம் கட்டி பல்வேறு பணிகளை செய்யுமாறு டெலிகிராம் ஐ.டி.,யில் இருந்து மர்ம நபர் தெரிவித்துள்ளனர்.இதை நம்பிய முத்துலிங்கம் பல்வேறு தவணைகளாக 94 ஆயிரத்து 168 ரூபாயை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலமாக செலுத்தியுள்ளார்.ஆனால், அவர் டாஸ்க் முடித்ததற்கான பணம் வரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துலிங்கம், ஆன்லைன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Sep-2024