சித்தேரிப்பட்டு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்
ரிஷிவந்தியம்; சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. வாணாபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், நகர சேர்மன் திருநாவுக்கரசு, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சக்திவேல் வரவேற்றார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., , பிளஸ்-1 பயிலும் 144 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் செல்வி பால்ராஜ், துணைத் தலைவர் பிளோமினாள், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தராஜ், தி.மு.க., நிர்வாகிகள் ராஜி, சுரேஷ், பெத்து, சரவணன், மார்ட்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் அமல்ராஜ் நன்றி கூறினார்.அதேபோல், சித்தால் அரசு மாதிரி பள்ளியில் பயிலும் 71 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.