மேலும் செய்திகள்
குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி
19-Jul-2025
குரூப் -2, 2 ஏ தேர்வு; இலவச பயிற்சி வகுப்பு
18-Jul-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி முதல் துவங்குகிறது.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.பயிற்சி வகுப்புகள் வரும் 23ம் தேதி முதல் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, வார நாட்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்புவோர், தங்களது புகைப்படம், ஆதார் எண், குரூப் 2, 2ஏ தேர்விற்கு விண்ணப்பித்த நகல் ஆகிய விபரங்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தினை நேரில் அணுகி, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.இலவச மாதிரித் தேர்வு கள் வரும் ஜூலை 22, 29, ஆகஸ்ட் 5, 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடத்தப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
19-Jul-2025
18-Jul-2025