உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரிமா சங்க ஆலோசகர் முருகன் துணைவியார் கீதா நினைவு தினத்தை முன்னிட்டு, நகர அரிமா சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமிற்கு, மாவட்ட முதல் துணை ஆளுநர் ராஜாசுப்ரமணியம் தலைமை தாங்கினார். அரிமா சங்க ஆலோசகர் முருகன் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர்கள் உலகளந்தான், சத்தியநாராயணன், பால்ஆரோக்கியராஜ், ராமகிருஷ்ண ரமணன், அரிமா சங்கத் தலைவர் வில்வபதி முன்னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்ற 210 பேருக்கு கண் பரிசோதனை செய்து, 65 பேர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை அரிமா சங்க செயலாளர் உஷாராணி, பொருளாளர் ராஜேஸ்வரி, ஜெயந்தி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை