உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச மருத்துவ முகாம்: விழிப்புணர்வு பேரணி

இலவச மருத்துவ முகாம்: விழிப்புணர்வு பேரணி

சின்னசேலம்: சின்னசேலம் அரசு பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர். சின்னசேலம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமையொட்டி நடந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பேரணியை சி.இ.ஓ., கார்த்திகா துவக்கி வைத்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி