உள்ளூர் செய்திகள்

கந்த சஷ்டி விழா

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சுப்ரமணிய சுவாமி தனி சன்னதி உள்ளது.கோவிலில் திருப்பணிகள் நடந்து வருவதால் நடப்பாண்டு கந்தசஷ்டி திருவிழா நடைபெறவில்லை. கந்த சஷ்டியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.சுப்ரமணிய சுவாமிக்கு அபிேஷக ஆராதனை மற்றும் விசேஷ அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி