உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் ரயில்நிலையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. சின்னசேலம் ரயில் நிலையம் கட்டும்போது, அங்கிருந்த நுாற்றாண்டு பழமை வாய்ந்த வலம்புரி சித்தி விநாயகர் கோவிலை அகற்ற முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ரயில் நிலைய பணிகளை பாதிக்காதவாறு கோவிலில் வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ரயில்வே துறை அனுமதி பெற்று, நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் மணிவண்ணன், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் விவித சேத்திர பொறுப்பாளர்கள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். சின்னசேலம் வன்னியர் சங்கம், வாணியர் செட்டியார் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ