உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் சூழ்ந்து சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியின் 21 வார்டுகளிலும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரி குப்பைகளை வீடுகள் தோறும் சென்று தரம் பிரித்து சேகரிக்கின்றனர். மக்கும் குப்பைகளை உயிர் உரங்கள் தயாரிக்கும் பணிக்கும், மக்காத குப்பைகளை மூட்டைகளாக கட்டி, அரியலுார் சிமென்ட் கம்பெனிக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.ஆனால், நகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் சேகரமாகும் குப்பைகளும் அகற்றும் பணிகளில் சில நாட்களாக தொய்வு ஏற்பட்டுள்ளது. துருகம் சாலை கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி, மலைபோல் சூழ்ந்துள்ளது.இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.நகராட்சி பணியாளர்கள் கழிவுநீர் கால்வாயில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை தினசரி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ