மேலும் செய்திகள்
ஈரோட்டில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம்
22-May-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே முன்னாள் பிரதமர் ராஜிவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.திருக்கோவிலுார் தொகுதி காங்., சார்பில், சு.பில்ராம்பட்டு கிராமத் தில், ராஜிவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.முகையூர் வட்டார தலைவர் பழனி தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் வாசிம் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்தனர்.இதில் ஊராட்சி தலைவர் கனகா பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மணம்பூண்டி வட்டாரத் தலைவர் பாவாடை நன்றி கூறினார்.
22-May-2025