மேலும் செய்திகள்
நியமனம்
22-Nov-2024
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த விரியூர் இம்மாகுலேட் மகளிர் கல்லுரியில் எரிவாயு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் சுதர்சன் இண்டேன் காஸ் நிறுவணம் சார்பில் விரியூர் இம்மாகுலேட் மகளிர் கல்லுாரியில் எரிவாயு (காஸ் சிலிண்டர்) பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வாணாபுரம் வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். நுகர்வோர் சங்க செயலாளர் மணி, கல்லுாரி செயலாளர் லில்லிமேரி, முதல்வர் குருசம்மாள் முன்னிலை வகித்தனர். காஸ் நிறுவன மேலாளர் பிரபாகரன் வரவேற்று காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயராஜ் மற்றும் கல்லுாரி மாணவிகள் பலர் பங்கேற்றனர். காஸ் நிறுவன உதவி மேலாளர் கோபி நன்றி கூறினார்.
22-Nov-2024