மேலும் செய்திகள்
சிறுமி மாயம்
12-Dec-2024
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அருகே திருமணமான 5 மாதத்தில் சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த திருக்கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய தம்பி மகன் திருமலைவாசன், 27; இவரது மனைவி நிஷா நந்தினி, 16; இவர் கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூன் மாதம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி சிவன் கோவிலில் திருமணம் நடந்தது.இந்நிலையில் நிஷாதர்ஷினி திருக்கனங்கூர், காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். கடந்த மாதம் 18ம் தேதி நிஷாதர்ஷனி தனது கணவர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.உடன், சென்னை, போரூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று அதிகாலை இறந்தார்.திருக்கனங்கூர் கிராம நிர்வாக அலுவலர் திவிகுமார் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Dec-2024