| ADDED : நவ 09, 2025 06:23 AM
திருக்கோவிலுார்: பெங்களூருவில் இருந்து ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்த அரசு பஸ் நடத்துனரை போலீசார் கைது செய்தனர். அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, அரகண்டநல்லுார் ரயில்வே சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை மறித்து சோதனை செய்தனர். வாலிபர் கொண்டு வந்த பெட்டியில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல் உள்ளிட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், வீரசோழபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ராமமூர்த்தி, 36; மணம்பூண்டியில் உள்ள திருக்கோவிலுார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சி.எல்., நடத்துனராக பணியாற்றி வருவதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்து. இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து 50 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர்.