உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை

அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை

கள்ளக்குறிச்சி : நிறைமதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், பகல் நேரங்களில் தெரு நாய் உள்ளிட்டவை வகுப்பறைக்குள் வருகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தினுள் அமர்ந்து மது அருந்துதல், பணம் வைத்து சூதாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அங்கு சிதறி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டிய நிலை உள்ளது. எனவே பள்ளிக்குள் சமூக விரோதிகள் நுழையாதபடி, பள்ளி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ