மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டம் 23ம் தேதி ஒத்தி வைப்பு
16-Mar-2025
திருக்கோவிலுார் : அரகண்டநல்லூர் அடுத்த அருணாபுரம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். ஊராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஊராட்சி நிர்வாக பொது செலவினம் குறித்தும், தணிக்கை அறிக்கை மற்றும் சுகாதாரமான குடிநீர் வினியோகம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூடுதல் ஆட்சியர் பத்மஜா, ஒன்றிய குழு சேர்மன் தனலட்சுமி , உதவி இயக்குனர் மஞ்சுளா, ஆர்.டி.ஓ., முருகேசன், பி.டி.ஓ.,க்கள் சண்முகம், ஜெகநாதன், தாசில்தார் முத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி துணைத் தலைவர் பூமா நன்றி கூறினார்.
16-Mar-2025