மேலும் செய்திகள்
குறைகேட்புக் கூட்டம்533 மனுக்கள் குவிந்தன
03-Jun-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 489 மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பட்டா மாற்றம், நிலம் அளவீடு, வீட்டு மனை பட்டா கோருதல், தொழில் தொடங்க கடனுதவி.சாலை வசதி ஏற்படுத்தி தருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் கோருதல் உட்பட பல்வேறு பொது பிரச்னைகள், கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்.கூட்டத்தில், 489 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
03-Jun-2025