உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூன்று வாரங்களுக்குப் பின் இன்று குறைகேட்பக் கூட்டம்

மூன்று வாரங்களுக்குப் பின் இன்று குறைகேட்பக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 3 வாரங்களுக்குப் பின் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் இன்று நடக்கிறதுகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்பர்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தனி நபர், மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார் மற்றும் கோரிக்கை தொடர்பாக அளிக்கும் புகார் மனுக்களை பெற்று துறை சார்ந்த அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுப்படும்.இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்களிலும் கடந்த மே 12ம் தேதி தொடங்கிய ஜமாபந்தி 27ம் தேதி வரை நடந்தது. இதனால், கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவில்லை.ஜமாபந்தி முடிவடைந்ததால் 3 வாரங்களுக்குப் பின் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை