மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டத்தில் 396 மனுக்கள் வழங்கல்
07-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 7 மாற்றுத் திறனாளிகளுக்கு 1.61 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி பொருட்களை கலெக்டர் வழங்கினார். கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பட்டா மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றம், வீட்டு மனை பட்டா கோருதல், சாலை வசதி ஏற்படுத்தி தருதல். குடிநீர் பிரச்னை சரிசெய்தல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, தெரு மின்விளக்கு அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 412, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 5 என மொத்தமாக 417 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காணுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய முகாம்களின் போது உதவி உபகரணங்கள் கேட்டு மாற்றுத்திறனாளிகள் பலர் மனு அளித்தனர். மனுக்கள் மீது பரிசீலினை மேற்கொண்டு, ஒருவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, 3 பேருக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், ஒருவருக்கு ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் செல்போன் என மொத்தம் 7 பேருக்கு 1.61 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் அந்தோணிராஜ் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
07-Oct-2025