உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது

குட்கா விற்ற மளிகை கடைக்காரர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் ராமச்சந்திரன் மகன் பிரகாஷ், 47; என்பவரது மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. உடன், 60 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பிரகாைஷ 47 கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை

திருநாவலுார் அடுத்த பெரும்பட்டு கிராமத்தில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏழுமலை, 55; என்பவரது பெட்டி கடையில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. உடன், குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, ஏழுமலையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை