குதிரைச்சந்தல் அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை
கள்ளக்குறிச்சி: குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் வகுப்பறைகள் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சி.இ.ஓ., கார்த்திகா பரிந்துரைப்படி, இப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் 1.23 கோடி ரூபாய் மதிப்பில் 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமையில், குதிரைச்சந்தல் ஊராட்சி தலைவர் அனுசெல்லப்பிள்ளை மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மணிமாறன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ஆனந்தஜோதி, ஹெலன் ஜெயா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அறிவழகன், மேலாண்மைக் குழு தலைவர் பூவாயி சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்மணி வடமலை, ராஜேஸ்வரி பாக்கியராஜ், ஊராட்சி துணைத் தலைவர் சகுந்தலா பழனிசாமி, காரனுார் ஊராட்சி தலைவர் கவிதா கனகராஜ், ஊராட்சி செயலாளர் கருணாநிதி, கிளைச் செயலாளர்கள் மயில்சாமி, அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.