போக்சோவில் கைதானவர் மீது குண்டாஸ்
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே போக்சோவில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தி லும் கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரைச் சேர்ந்தவர் பவுல் பீட்டர், 50; கூலித் தொழிலாளி. இவர், 16 வயது மனநிலை பாதித்த சிறுமியை கடந்த 20 நாட்களுக்கு முன் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பவுல் பீட்டரை கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ரஜத்சதுர்வேதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில், பவுல் பீட்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் கடலுார் மத்திய சிறையில் உள்ள பவுல் பீட்டரிடம் வழங்கப்பட்டது.