உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்பனை கடைக்கு சீல்

குட்கா விற்பனை கடைக்கு சீல்

கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.கச்சிராயபாளையம் எல்.எப்., சாலையில் பரமசிவம் மகன் சண்முகம் 55, என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து உள்ளார். குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கச்சிராயபாளையம் போலீசார் சண்முகத்தை கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் தாரணி எஸ்.எஸ்.ஐ., தனசேகர் தலைமையில் கடைக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை