உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ெஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

ெஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

கள்ளக்குறிச்சி, ; போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படை சார்பில் ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பைக் ஊர்வலம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் ரவுண்டானா அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., தேவராஜ் முன்னிலை வகித்தார். பைக்கில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும். எதிர்பாராத சமயத்தில் ஏற்படும் விபத்துகளில் இருந்து உயிர்களை காப்பாற்றுவது ெஹல்மெட் தான், செல்போன் பேசியவாறும், மது போதையிலும் வாகனம் ஓட்டக்கூடாது, அதிவேகமாக பைக் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி அறிவுறுத்தி, 30 பேருக்கு இலவசமாக ெஹல்மெட் வழங்கினார். தொடர்ந்து, ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த பைக் ஊர்வலத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். ஏமப்பேர் ரவுண்டானாவில் இருந்து புறப்பட்ட பைக் ஊர்வலம் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு வழியாக காரனுார் வரை சென்றது.ஊர்வலத்தில், இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, ராபின்சன், ஏழுமலை, ஊர்க்காவல் படை மண்டல தளபதி வசந்தபாலா மற்றும் போக்குவரத்து போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள், தனியார் பைக் ேஷாரூம் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ