உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழி காட்டி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளியின் நீட் இயக்குனர் அஞ்சப்பெல்லி ஷர்வன்குமார் முன்னிலை வகித்தார். முதுகலை தமிழாசிரியர் சதிஷ் வரவேற்றார். பள்ளி முதல்வர் வெங்கட் ரமணன் அறிமுக உரையாற்றினார். சென்னை ஆர்.ஐ.டி., கல்லுாரி பேராசிரியர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி பிளஸ் 2வுக்கு பிறகு என்ன படிக்கலாம், உயர்கல்வி சேர்க்கை குறித்து பேசினார்.தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் நான்சிமாதுளா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை