மேலும் செய்திகள்
அரகண்டநல்லுாரில் எள் விலை வீழ்ச்சி
03-May-2025
திருக்கோவிலுார் : தமிழகத்தில் அதிகபட்ச விற்பனையில் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி நேற்று முன்னிலை வகித்தது.அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டு வரும் கமிட்டியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.இதற்கு காரணம் தென்பெண்ணை ஆற்றை ஓட்டியுள்ள நிலப்பரப்புகளில் நிலத்தடி நீரைக் கொண்டு நெல், மணிலா, எள், உளுந்து, மக்காச்சோளம் மற்றும் பயிறு வகை பயிர்கள் என அனைத்து வகை பயிர்களும் முப்போகம் பயிரிடப்படுவதால் ஆண்டு முழுதும் அரகண்டநல்லூர் கமிட்டியில் தொடர்ந்து விளைபொருட்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இ நாம் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விரைவாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதால் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்ட விவசாயிகளும் தங்கள் விளை பொருட்களை இங்கு கொண்டு வருகின்றனர். நேற்று 2,100 மூட்டை எள், 3,100 மூட்டை நெல் என 1081 விவசாயிகள் 534 மெட்ரிக் டன் விளை பொருட்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதன் மூலம் ரூ. 2.89 கோடி வர்த்தகமானது. நேற்றைய வர்த்தகத்தில் தமிழகத்தில் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி முன்னிலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
03-May-2025