உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஹிந்து முன்னணி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்

ஹிந்து முன்னணி மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் பல ஆண்டுகளாக துவங்காமல் இருக்கும் தேர் வடிவமைப்பு பணிகளை உடன் துவக்கிட வேண்டுமென, அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுக்க ஹிந்து முன்னணியினர் தீர்மானம் நிறைவேற்றினர். கள்ளக்குறிச்சியில் ஹிந்து முன்னணியின் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் மனோகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் ஹிந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு செயல் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வரும் 9ம் தேதி ஹிந்து முன்னணி நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு செயல்திட்ட துண்டு பிரசுரங்களை அனைவருக்கும் வழங்க வேண்டும். பசுத்தாய் மாத இதழை, அனைவரது வீடுகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும். கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் பலமுறை நிதி ஒதுக்கியும் இதுவரை துவக்கப்படாமல் இருக்கும் தேர் வடிவமைப்பு பணிகளையும், தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளையும் துவக்கிட இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ