உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சின்னசேலம் : சின்னசேலத்தில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சின்னசேலம், காந்தி நகர் பகுதி சேர்ந்தவர் விஜயராஜா மனைவி பவித்ரா, 27; இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கோவிலுக்கு சென்றார். கோவிலில் இருந்து வீடு திரும்பியபோது பீரோ சாவியுடன் திறந்த நிலையில் இருந்தது. பீரோவில் இருந்த 3 சவரன் நகை, ரூ. 4 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை