உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி குழந்தையம்மாள், 44; விவசாயி. இவுர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 2 சவரன் நகைகள், துணிகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. புகாரின் பேரில், எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை