உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெளிநாட்டில் கணவர் இறப்பு : உடலை மீட்டுத்தரக்கோரி மனு

வெளிநாட்டில் கணவர் இறப்பு : உடலை மீட்டுத்தரக்கோரி மனு

கள்ளக்குறிச்சி: சவுதிஅரேபியாவில் சாலை விபத்தில் உயிரிழந்த கணவனின் உடலை மீட்டுத்தரக்கோரி அவரது மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி சின்னப்பிள்ளை,45; மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; கணவர் ஜெயபிரகாஷ் கடந்த 2024ம் ஆண்டு செப்., மாதம் டிரைவர் பணிக்காக சவுதிஅரேபியாவுக்கு சென்றார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி நடந்த சாலை விபத்தில் ஜெயபிரகாஷ் இறந்து விட்டதாக போன்மூலம் தகவல் கிடைத்தது. ஆனால், ஜெயபிரகாஷின் உடல் மற்றும் அவரது உடமைகளை அனுப்பி வைக்காமல் உள்ளனர். செலவு செய்து ஜெயபிரகாஷின் உடலை கொண்டு வரும் அளவிற்கு வசதி இல்லை. எனவே, ஜெயபிரகாஷின் உடல் மற்றும் உடமைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !