உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் நல்லதம்பி, 39; இவருக்கும, இவரது மனைவி பானுமதி என்பவருக்கும் கடன் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றவர். வீடு திரும்ப வில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பானுமதி கொடுத்துள்ள புகாரின் பேரில், உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !