உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் கல்லுாரியில் நான் முதல்வன் திட்ட முகாம்

திருக்கோவிலுார் கல்லுாரியில் நான் முதல்வன் திட்ட முகாம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரி கனவு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் துரைராஜ், தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த பிளஸ் ௨ முடித்த உயர் கல்வி பயில தகுதி வாய்ந்த மாணவர்கள் 800 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு கலை அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், ஐ.டி.ஐ., உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்ட ஸ்டால்கள் மூலம் அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டு முறைகள் விளக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலியபெருமாள், முரளி, சரளா, ரோசாலி செய்திருந்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை