உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னக்கொள்ளியூர் பள்ளியில் மகிழ் முற்றம் துவக்க விழா

சின்னக்கொள்ளியூர் பள்ளியில் மகிழ் முற்றம் துவக்க விழா

ரிஷிவந்தியம்: சின்னக்கொள்ளியூர் துவக்கப்பள்ளியில் மகிழ் முற்றம் துவக்க விழா நடந்தது.வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூர் துவக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மேலாண்மைக்குழு தலைவர் கவினா, துணைத்தலைவர் அர்ச்சனா, முன்னாள் தலைவர் ராசாத்தி முன்னிலை வகித்தனர்.பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்களையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்களாக பிரித்து, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், வெள்ளை ஆகிய வண்ணங்களில் கொடிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு குழு தலைவர்களும் பதவி ஏற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ரங்கநாயகி, வள்ளிக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ