வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்டத்தின் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கு 6 நாட்கள் நடக்கும் இலவச பயிற்சிக்கான துவக்க விழா நடந்தது.விழாவிற்கு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி பயிற்சியை துவக்கி வைத்தார். இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் கள்ளக்குறிச்சி முரளிதரன், விழுப்புரம் பேபிஷாலினி முன்னிலை வகித்தனர்.விழாவில் சமூக வள பயிற்றுனர்களுக்கு பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது. விழாவில் பயிற்றுநர்கள் உதயகுமார், பாலமுருகன் உட்பட அலுவல ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் விஜியகுமார் நன்றி கூறினார்.