உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களுக்கு ஊக்கத்தொகை : கலெக்டர் உத்தரவு

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை : கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மாணவர்கள் ஊக்கத்தொகை பெற, அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் பயன்பெறும் வகையில், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தொடர்பான மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ், சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியர், ஊக்கத் தொகையை ஒவ்வொரு மாதமும் தவறாமல் பெரும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கல்லுாரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும். மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து கல்லுாரிகளில் முகாம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை