உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருக்கோவிலுார் : சாத்தனுார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரம் சாத்தனுார் அணை வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து அணை யின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,920 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 119 அடி உயரமுள்ள அணையில், 115.65 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அளவு கொள்ளளவு கொண்ட அணையில், தற்பொழுது 4,634 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் ஏதும் இல்லை. இதன் காரணமாக அணை 63.35 சதவீதம் நிரம்பியுள்ளது.வரும் நாட்களில் அணைக் கான நீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் அணை விரைவில் நிரம்பும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி