உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓட்டுச்சாவடி முகவர்கள் நியமன படிவங்கள் வழங்க அறிவுறுத்தல்

ஓட்டுச்சாவடி முகவர்கள் நியமன படிவங்கள் வழங்க அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி, ; ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் நியமன படிவங்களை இன்றைக்குள் வழங்க அரசியல் கட்சியினருக்கு டி.ஆர்.ஓ., அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் நியமனம் மற்றும் ஓட்டுச்சாவடி மையங்கள் பிரிப்பது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கினார். இதில், ஓட்டுச்சாவடி நிலை முகவர்களை நியமனம் செய்த அரசியல் கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ள ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் படிவத்தில் ஏற்கனவே உள்ள விவரங்களுடன் கூடுதலாக போட்டோ, மொபைல் எண்ணை குறிப்பிட்டு படிவம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஓட்டுச்சாவடி நியமனம் செய்யாத மற்றும் நியமனம் நிலுவை வைத்துள்ள அரசியல் கட்சிகள் இன்றைக்குள் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்கவும், ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் தங்களது பாகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து இறப்பு மற்றும் இடம் பெயர்ந்தவர்களின் பட்டியல் உரிய படிவத்தில் வழங்கவும், தெரிவிக்கப்பட்டது. மேலும் 1,200க்கு மேல் வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரித்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, அரசியல் கட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி