ஆற்றில் அடித்து சென்றவர் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர் குறித்து தெரிந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் தாக்கூர்சிங் மகன் திலிப்குமார்,45; இவர் கடந்த 12ம் தேதி தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். ஆற்றில் அடித்து சென்றபோது கருப்பு கலர் டீ சர்ட், புளு கலர் லோயர் அணிந்திருந்தார்.அவரை தேடும் பணி தொடர்ந்த நடந்து வருகிறது. எனினும் இதுவரை கண்டறிய இயலவில்லை. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட திலிப்குமார் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலரை 94896 29011 என்ற எண்ணிலோ, வாணாபுரம் தாசில்தார் 89460 97728 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் சங்கராபுரம் காவல் ஆய்வாளரை 94981 54271 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.