உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு

 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வினை 160 பேர் எழுத உள்ளனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு -2 வரும் 16ம் தேதி நடக்கிறது. மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி மற்றும் உளுந்துார்பேட்டை ஸ்ரீ விநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆகிய இரண்டு மையங்களிலும் கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது. காலையில் நடைபெறும் தேர்வில் 80 பேர், மாலையில் நடைபெறும் தேர்வில் 80 பேர் என மொத்தமாக 160 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வில் பங்கேற்க இயலாது. தேர்வு மையத்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும், தடையின்றி மின்சாரம் வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை