உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மரவள்ளி சாகுபடி விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு

மரவள்ளி சாகுபடி விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு

கள்ளக்குறிச்சி; மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வானிலை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக் குறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 16 ஆயிரம் ெஹக்டரில் விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர். ராபி, 2024-25ம் ஆண்டு காப்பீடு திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறுவனமான இந்தியா வேளாண் காப்பீட்டு நிறுவனம் மரவள்ளி கிழங்கு பயிருக்கு, வானிலை பயிர் காப்பீட்டு திட்டம் என்ற மாதிரி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்கு காப்பீட்டு கட்டணம் 1 ஏக்கருக்கு ரூ.404.85 செலுத்தி பயன்பெறலாம். ஒரு ஏக்கருக்கு ரூ.8097.16 காப்பீட்டு தொகை வழங்கப்படும். விவசாயிகள், நாளைக்குள் காப்பீடு செலுத்தி பயன் பெறலாம். ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா, அடங்கல், நாமினி ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் காப்பீடு செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் சின்னசேலம்- 9787863135; கள்ளக்குறிச்சி-- 8098327732; தியாகதுருகம்-8015331947; சங்கராபுரம்- 9566714589; கல்வராயன்மலை--9787237797; ரிஷிவந்தியம்- 8610356837; திருக்கோவிலுார்-7845818577; உளுந்துார்பேட்டை--8610356837; திருநாவலுார்- 9976196911 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ