மேலும் செய்திகள்
சென்னகுணம் ஊராட்சியில் திண்ணை பிரசாரம்
05-May-2025
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குட்டி வரவேற்றார். இணை செயலாளர் பிரபு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாளான வரும் 12ம் தேதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது. பாக பொறுப்பாளர்களை நியமனம் செய்து வரும் மாவட்ட செயலாளர் குமரகுரு மற்றும் உறுதுணையாக இருக்கும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வேட்பாளர் வெற்றிக்கு தீவிரமாக தேர்தல் பணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெ., பேரவை நிர்வாகிகள் அருள்மணி, வேணுகோபால், ஏழுமலை, ராஜேந்திரன், மதியழகன், ரவி, அய்யப்பன், ஜெயசங்கர், குமார், பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.ஒன்றிய பேரவை செயலாளர் கஜேந்திரமணி நன்றி கூறினார்.
05-May-2025