உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரம் தாசில்தார் அலுவலகம் அருகில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ராஜா வரவேற்றார். ஜாக்டோ-ஜியோ மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் லட்சுமிபதி, ஆசிரியர் தேவராஜன், ஞானப்பிரகாசம், ஜான்ரத்தினம், செல்லதுரை,சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் விஜயா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. வட்ட பொருளாளர் ஷாகிதா நன்றி கூறினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் ரஹீம் முன்னிலை வகித்தனர். நில அளவை மாவட்ட துணைத் தலைவர் செந்தில்முருகன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர் ஏழுமலை, ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை