அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் நகை திருட்டு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனைவி பார்வதி, 38; இவர் நேற்று சொந்த வேலைக்காக உளுந்தூர்பேட்டை சென்று விட்டு, பின்னர் உளுந்தூர்பேட்டையிலிருந்து அரசு பஸ்சில் வலசை கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்த அரசு பஸ் திருச்சி ரோடு ரவுண்டானா அருகில் சென்ற போது தனது பையில் மணிபர்சில் வைத்திருந்த 2 கிராம் கம்மல் மற்றும் 2000 ரூபாய் பணம் திருடு போனதை க ண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பஸ் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பஸ்சில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில் யாரிடமும் திருடு போன பொருள் இல்லாததால் பஸ்சை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.