உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆலத்துார் ரேஷன் கடையில் இணைப்பதிவாளர் ஆய்வு

ஆலத்துார் ரேஷன் கடையில் இணைப்பதிவாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த கே.ஆலத்துார் ரேஷன் கடையில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பி.ஓ.எஸ்., கருவியில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை, கடை இருப்புகளும் சரியாக உள்ளதா, காலி சாக்கு பைகள் சரியான எண்ணிக்கையில் உள்ளதா என ஆய்வு செய்தார். தொடர்ந்து, காலி சாக்கு பைகளை கட்டி வைக்க வேண்டும், கடையினை சுத்தமாக பராமரிக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும் என விற்பனையாளர் கவுதமியிடம் அறிவுறுத்தினார். அப்போது, கூட்டுறவு சங்க பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை