மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி உற்சாகம்
05-Jan-2025
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியத்தில் கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ரிஷிவந்தியத்தில் இளைய நட்சத்திர குழு சார்பில் 16வது ஆண்டு கபடி போட்டி நடந்தது. 15 வயதுக்குட்பட்டவர்கள், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டி நடந்தது. மொத்தமாக 10 அணிகளை சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அணிக்கு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பிடித்த அணிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைய நட்சத்திர குழுவினர் செய்தனர்.
05-Jan-2025